Description
மவுரியப் பேரரசின் மதிப்பு மிகுந்த பேரரசர் அசோகர். 2 ஆயிரத்து 275 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா முழுவதையும் மட்டுமல்லாது, உலகின் பெரும்பகுதியை அன்பால் அடிமைப்படுத்தியவர். இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் அசோகர் பேரரசர்களுக்கு எல்லாம் பேரரசராக போற்றப்படுகிறார். அவரைப் போன்ற பேரரசரை உலக வரலாறு கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை. இளமையில் சாம்ராஜ்ய வெறிபிடித்து நாடுகளை கைப்பற்றிய அசோகர், கலிங்கப் போருக்குப் பிறகு புத்தமதத்தில் இணைந்தார். அன்பைப் போதித்த அந்த மதத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தார். மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களுடைய இதயத்தை வெல்ல முடியும் என்பதை மெய்ப்பித்தார். தத்துவார்த்த ரீதியிலான நிர்வாகி என்று புகழ்பெற்றவர் அசோகர். இவருடைய பேரரசு ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் மலைகளில் இருந்து கிழக்கே வங்கதேசம் அசாம் வரையிலும் எல்லையாக கொண்டிருந்தது. தெற்கே கேரளாவின் வடபகுதி, அந்திராப் பிரதேசம் வரையிலும் பரவியிருந்தது.
Reviews
There are no reviews yet.