Description
பெனாசிரின் வாழ்க்கை மிகக் குறுகியது. அதிலும் வெளிநாட்டிலேயே பெரும்பாலும் கழிந்துவிடுகிறது. சொந்த நாட்டில் தங்க முடியாத அளவுக்குச் சித்திரவதைகளை அனுபவித்தவர் அவர். இஸ்லாமிய நாட்டின் தலைவர் என்பதால் சொந்த வாழ்க்கையில் சுவாரஸ்யங்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், அவரைப் பற்றிய விவரங்களைத் தேடும்போது, மர்மமான பல புதிர்களுக்கு விடை கிடைக்கிறது. அது திடுக்கிடும் வகையில் இருக்கிறது. புட்டோ குடும்பத்தின் தலைமகள் பெனாசிர், பாகிஸ்தானில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரது தம்பிகள் இருவரும் ஜியா அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அதுவும் வெளிநாட்டில் இருந்தபடியே.
அவர்களுடைய போராட்டம் ஜியாவை பாடாய் படுத்துகிறது. அவர்களுடைய தலைக்கு விலை வைக்கிறார். ஒரு தம்பி ஷாநவாஸ், பிரான்சில் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். சாவதற்கு சில நாட்களுக்கு முன் தனது மனைவி மீது அவர் சந்தேகம் தெரிவிக்கிறார். காபூலைச் சேர்ந்த அவர், ஜியாவின் ஏஜெண்ட்டாக இருப்பாரோ என்று அவர் அக்காவிடம் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார். ஜியா அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வகையில், புட்டோ சகோதரர்கள், பாகிஸ்தான் விமானத்தை கடத்துகிறார்கள். அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு தம்பி முர்தாஸா அக்காவுடனும், மச்சான் சர்தாரியுடனும் நடத்திய போராட்டத்தை விரிவாக சொல்லியிருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.