Description
எல்லாம் நம் கையில் என்ற எண்ணம் வந்துவிட்டால், பிறரைக் குறைகூறும் நிலை வராது. சிந்தனையை விசாலப்படுத்த வேண்டும். குறுகிய வட்டத்திற்குள் நம்மை அடைத்துவிட்டால். நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியாமல் மூச்சுத்திணறி மடிந்துவிடும் நிலை ஏற்படும். அதற்காகவா நாம் பிறந்தோம்?
நமது வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள ஏதேனும் சாதிக்க வேண்டாமா? நமக்கான அடையாளமாக எதையேனும் விட்டுச் செல்ல வேண்டாமா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், படிக்கிறவர்களின் மனதைப் பக்குவப்படுத்த, இந்த நூலில் உள்ள கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறேன். வாழ்க்கையை இலகுவாகவும், நேர்த்தியாகவும் வாழ்வதற்குத் தடையாக, குறுக்கே வரும் இடையூறுகளைப் புறமொதுக்கி முன்னேறும் உத்வேகத்தை இந்தக் கட்டுரைகள் உங்களுக்குத் தரும். நம்மை நாம் நம்ப வேண்டும். அப்போதுதான் பிறர் நம்மை நம்பும் வகையில் காரியம் ஆற்ற முடியும். யாரையும் நம்பி நான் இல்லை என்று கூறுவது அசாத்தியமான துணிச்சல். அது ஒருவகையான முரட்டுத் துணிச்சல். உலகில் நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஏதேனும் ஒருவகையில் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாய நிலையை உணர வேண்டும். இதை மறுத்தால் நாம் தனிமைப்பட்டு விடுவோம்.
Reviews
There are no reviews yet.