Description
திரைத்துறையின் வளர்ச்சிக்காக எத்தனையோ மேதைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். வணிக நோக்கத்துடன் திரைப்படங்களை தயாரித்தவர்கள், கலைக் கண்ணோட்டத்துடன் திரைப்படங்களை உருவாக்கியவர்கள் என இருவிதமான சாதனையாளர்கள் பவனி வந்தார்கள். மவுனப்பட காலத்தில் திரைத்துறையில் நுழைந்து பேசும்படங்களிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அனைவருமே காலங்காலமாக நினைக்கப்படுகிறார்கள். அடுத்துவரும் தலைமுறையினர் தங்களுடைய முந்தைய தலைமுறை சாதனையாளர்களை கவுரவிக்கிறார்கள்.
சாதனையாளர்களைக் கவுரவிக்க எத்தனையோ திரைத்துறை விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதியான அனைவருக்குமே இந்த விருதுகள் கிடைக்கின்றன. சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாரத் பட்டம் கடைசிவரை நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்படவில்லை. அந்த விருது சிவாஜிக்கு வழங்கப்படாததால், அவருடைய திறமையை யாரும் குறைவாக மதிப்பிடவில்லை. மாறாக, அந்த விருதுதான் தன்னுடைய மதிப்பை இழந்ததாக பிரபல நடிகர்கள் தெரிவித்தனர். திரையுலகைச் சேர்ந்த அனைத்து மேதைகளுமே நடிகர்திலகம் சிவாஜியின் நடிப்பாற்றலில் மயங்கிக் கிடந்தனர். நடிகர்களுக்கு நடிகராக அவர் இருந்தார். அவரை நடிப்புப் பல்கலைக்கழகம் என்றே எல்லோரும் அழைத்தனர். அவர் நடித்த பாத்திரங்கள் பலவற்றை வேறு யாருமே செய்யமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. பாரத் பட்டம் பெற்ற சஞ்சீவ் குமார், கமல்ஹாஸன் போன்ற நடிகர்களே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.