Description
சித்திர எழுத்துக்கள்தான் முதன்முதலில் பயன்பாட்டில் இருந்தது. குகைகளில் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் வரைந்த சித்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் செதுக்கிய சிற்பங்களும் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன. மனிதனின் கலை உணர்வு காலங்காலமாக வளர்ந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அது வெவ்வேறு வடிவம் பெற்றது. இந்த நூலில் உலகின் தலைசிறந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. அத்துடன் அவர்கள் எவ்வாறு மிகச் சிறந்த ஓவியர்க ளாகவும் சிற்பிகளாகவும் வளர்ந்தார்கள் என்பதும் கூறப்பட் டுள்ளது. அவர்களுடைய படைப்புகளில் மிகச்சிறந்தவை எனப் போற்றப்படும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் இந்த நூலின் முக்கிய அம்சமாகும்.
Reviews
There are no reviews yet.