Publisher
SIBI Pathippagm
Category
General

அறிவியல் தொழில்நுட்ப உண்மைகள்
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
80
Year
2016
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹215.00
❋ Earn 11 points from this purchaseபுதிய விஷயங்களை கண்டுபிடித்து, மனித அறிவை வளர்த்துக் கொள்வது. தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் எல்லாவற்றையும் பற்றி புரிந்துகொள்வது தான் அறிவியல். கட்டுப்பாடான வழிகளைப் பயன்படுத்தி, இயற்கை மற்றும் சமூக போக்குகளின் ஆதாரங்களை அறிவியலாளர்கள் சேகரிக்கின்றனர். ஒவ்வொன்றும் எப்படி இயங்குகின்றன என்பதற்கு கோட்பாட்டு ரீதியான விளக்கங்களை அவர்கள் தருகிறார்கள். தங்களுடைய விளக்கங்களை அவர்கள் பகிரங்கமாக வெளியிடுகிறார்கள். அவர்களுடைய விளக்கங்களை மற்ற விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதை சரியா என்று உறுதி செய்கிறார்கள். கடந்த கால நிகழ்வுகளை சரியாக புரிந்துகொள்ள இந்த முயற்சிகள் உதவுகின்றன. மனித இனமும், இதர விலங்கினங்களும் அவற்றின் இயற்கை சூழ்நிலைகளுக்கு தக்கவாறு வாழ்வதற்கு தொழில்நுட்பங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவுகின்றன. இயற்கை வளங்களை தங்களுக்குத் தக்கவாறு மாற்றி எளிய கருவிகளாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை மனித இனம் அறிந்துள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்து உணவை 4 அறிவியல் தொழில்நுட்ப உண்மைகள் சமைத்து சாப்பிட்டான். சக்கரத்தைக் கண்டு பிடித்து எளிதில் இடம் மாறினான். நவீன காலத்தில் அச்சகங்களையும், தொலைபேசியையும், இணையதளங்களையும் கண்டுபிடித்து
தகவல் தொடர்புக்கான வசதிகளை எளிமைப்படுத்தினான். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை எளிதில் பரிமாற முடிகிறது. அதேசமயம், அமைதியான வழிக்கு மட்டுமின்றி அழிவுக்கான தொழில்நுட்பங் களையும் மனிதன் கண்டுபிடித்தான். அணு ஆயுதங்கள் இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்தப் புத்தகம் மனித இனத்தின் வாழ்க்கைச் சவுகரியங்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் எப்படி இயங்குகின்றன என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
© Shanlax
Reviews
There are no reviews yet.