‘ஆடி’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள இக்கவிதைத் தொகுப்பு சமூக நடைமுறைகளை அது நடைபோடும் விதத்தை சமதள ஆடிபோல் எதிரொளிப்பதாகும். ‘ஆடி அடங்கும் இம்மனித வாழ்க்கையில் ஆட்டம், பேராட்டம், போராட்டம் எனப் பல்வேறு வகையினதாய் மனித ஓட்;டம் நிகழ்கிறது. இதை உள்ளது உள்ளவாறே உரைப்பதே இக்கவிதைத் தொகுதியின் நோக்கமாகும். கற்பனைக் கலப்பின்றி, கண்கள் கண்டதை, உள்ளம் உணர்ந்ததை அப்படியே பதிவு செய்துளளது இந்நூல். ஒரு தனிமனிதன் தான் அடைந்த அனுபவங்கள், இச்சமூகம் அவனுக்கு வலிந்து கற்றுக்கொடுத்த வலிகள், தான் விரும்பிக் கற்றுக்கொண்ட பாடங்கள், அவ்வப்போது மாறு நிலைக்கு ஆட்படும் நட்பு, உறவு, அவற்றோடு நடக்கும் தனிமனிதப் போராட்டம், இவ்வாறாக சமூகம் தனிமனிதனுக்குக் கொடுத்ததும் தனிமனிதன் சமூகத்திற்குக் கொடுத்ததுமே. இப்புத்தகமாகும்;. ஆடி மாதப்பிறப்பு தமிழர்க்கு திருவிழா நாளாகும். அதைத் தலையாடி, நடு ஆடி மற்றும் கடைசி ஆடியெனக் கொண்டாடி மகிழ்வர்; புதிதாயத் திருமணமான தம்பதியர்க்கு பெண் வீட்டில் கறி விருந்து படைத்தும், நகை அணிவித்தும், புத்தாடை வழங்கியும் ஆடிப்பிறப்பைச் சிறப்புச் செய்வர்; இப்பேர்ப்பட்ட ஆடிமாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்பர். அது அறிவியல். ஆடிமாதம் காற்றுக்கான மாதமாகும். ‘ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்’ என்பது மூத்தோர் அனுபவம்; இவ்வகையான புயல்வேகக் காற்று, குழந்தைகட்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் என்பது நம்முன்னோர் கருத்து; ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் தமிழர் கலாச்சாரம்; மனிதர் ஆட்டம் பேராட்டம் போடுகிறார் என்பது ஆடிமாதக்காற்று ஆட்டம் அதிகம் போடும் என்பதால் மனிதராட்டம் ஆடிக்காற்றின் ஓட்டத்திற்கு ஒப்பாக்கப்படுகிறது. காற்றின் இச்செயல்களால்தான் பின்னாளில் மழைக்காலம் அமைகிறது என்பது அறிவியல். அதுவே பெயர்ச்சொல்லாய் மாறி மாதத்தை ‘ஆடி’ எனக்குறிக்கிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த ‘ஆடி’ என்னும் சொல்லை இப்புத்தகம் தாங்கி நிற்பது பொருள் பொதிந்த ஒன்றாகும்; இப்புத்தகம் தனது ஆட்டத்தால் மனிதர் வாட்டத்தைத் தன் கருத்துகளால் ஓட்டும்; வாழ்வியல் நாட்டம் கூட்டும்.
Reviews
There are no reviews yet.