Publisher
SIBI Pathippagm
Category
General
அடோல்ஃப் ஹிட்லர்
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
224
Year
2016
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹180.00
இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங்கோலர்களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டும் என்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ, அதுவாக ஆவோம் என்பதற்கு ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஜெர்மனியை தன்னால்தான் காப்பற்ற முடியும் என்று ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் நினைத்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹிட்லர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். ஜெயித்தும் காட்டினார். ஜெர்மனியைக் காப்பாற்ற வந்த தேவதூதராக தன்னை உருவகப்படுத்திக் கொண்டார். அதேசமயம், அவருடைய ஆழ்மனதில் படிந்துவிட்ட பழிதீர்க்கும் வன்ம உணர்வு, அவரை சாத்தானாக மாற்றிவிட்டது.
“யூதர்கள் வேறு யாருமில்லை. அட்டைப்பூச்சிகள். அவர்கள், ஆரிய இனத்தை அழிக்க வந்தவர்கள். எல்லா பாவங்களுக்கும் சாத்தான்தான் காரணம் என்பவர்கள்.” இன உணர்வு, வெறியாக மாறினால், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு, ஹிட்லரின் தனிமனித சர்வாதிகாரம் சரியான எடுத்துக் காட்டாகி விட்டது. 1933ல் ஹிட்லர் பதவியேற்கும்போது, ஜெர்மன் பொருளாதாரம் படுபாதாளத்தில் கிடந்தது. மூன்றே ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த முடிந்தது. அவரே வடிவமைத்த ஒலிம்பிக் ஸ்டேடியம் வெளிநாட் டவரை வியக்க வைத்தது. ஜெர்மன் விளையாட்டுக் குழுக்களில், உப்புக்குக் கூட யூதர்களை சேர்க்காமல், பெரும்பாலான பதக்கங்களை வாரிக்குவிக்க முடிந்தது. ஜெர்மன் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்த யூத கோடீஸ்வரர்களை ஒரே நாளில் பிச்சைக்காரர்களாக மாற்ற முடிந்தது. வோல்ஸ்வேகன் என்ற குறைந்த விலைக் காரை அடோல்ஃப் ஹிட்லர் வடிவமைத்தார். பீரங்கிகள், நீர்மூழ்கிகள் என அவருடைய வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தின. நாடுகளை கைப்பற்றினார். அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தினார்.
ஹிட்லரின் யுத்த வெறிக்கும் இனவெறிக்கும், சோவியத் யூனியன்தான் முடிவு கட்டியது. செஞ்சேனை வீரர்களும், பொதுமக்களுமாக 3 கோடிப்பேர் உயிர்த்தியாகம் செய்தனர். ஹிட்லர், தனது ஆற்றலை ஆக்கபூர்வமாக பயன் படுத்தியிருந்தால், ஜெர்மனி உலகின் வல்லமை பொருந்திய நாடாக மாறியிருக்கும் என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள். மக்கள் மனதில் இனவெறி என்ற விஷ வித்துக்களை விதைத்து ஆட்சிக்கு வந்தார். கடைசியில் அவரே மனிதகுலத்திற்கு விஷமாகிப் போனார். கலை ஆர்வமிக்கவர்கள் கொடுங்கோலர்களாக இருக்க மாட்டார்கள் என்று மானுடவியல் சொல்கிறது. ஆனால், தங்கள் திறன் அனைத்தையும் மற்றவர்களை அடக்கியாளப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் படிந்துவிட்டால், அவர்களுடைய கலாரசனை, கசடாகிவிடும் என்பதற்கு ஹிட்லரின் வாழ்க்கை கண்கண்ட சாட்சி.
© Shanlax
Reviews
There are no reviews yet.