Description
தமிழில் பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம் ஆகியவற்றுக்குத் தனித் தனியே இலக்கண நூல்கள் தோன்றலாயின. புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள், யாப்பருங்காலக் காரிகை, தண்டியலங்காரம் என்னும் நூல்களை இவற்றிற்கு எடுத்துகாட்டாகக் கூறலாம். இவற்றுள் நம்பி அகப்பொருள் அகஇலக்கணத்தை மட்டும் உணர்த்தும் நூலாக விளங்குகிறது. இது தொல்காப்பியரின் அகஇலக்கணங்களோடு பிற இலக்கியங்களையும் ஒப்புமைப்படுத்தி நுணுக்கமாக ஆராய்ந்து மேலும் புதிய இலக்கணங்களை வகுத்தளித்த பெருமைக்குரியது. தமிழரின் அகவாழ்வை மட்டும் விளக்கும் இலக்கண நூல்களுள் செறிவும் சிறப்பும் கொண்டு தலைமை வாய்ந்த நூலாக விளங்குகின்றது.
இந்நூலின் தனிச்சிறப்பு கருதியே இன்று பல கல்வி நிறுவனங்களிலும் இது முக்கிய பாடமாக இடம்பெற்றுள்ளது. இந்நூலுக்கு கருத்துரை, பொழிப்புரை, விசேடவுரை என பல உரைகளை வகுத்தளித்த சான்றோர்கள் பலர் ஆவர். காலப் பழைமையால் பழைய உரைகளின் மொழி நடை, தற்கால மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்; வகையில் இல்லை. எனவே இன்றைய மாணவர்கள் அகப்பொருளைத் தெளிவாக எளிதில் புரிந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற ஒரு கலங்கரை விளக்கமாக அமையும் நோக்குடன் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.