Be the first to review “Athu, Ithu, Yar, Yenke?” Cancel reply
Description
சின்ன விஷயமாகத்தான் இருக்கும். ஆனால், அதைப்பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அடடா, இந்த விஷயத்தை அறியாமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுவோம். உலகத்தில் மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாமல் நிலைத்திருக்கும். ஒவ்வொரு துறையிலும் கண்டுபிடிப்புகளும், புத்தாக்க முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. நாம் அறியாத விஷயங்களை நமது பிள்ளைகள் அறிந்திருக்கிறார்கள். ஒருபக்கம் சந்தோஷம். ஒருபக்கம் ஏக்கம். நம்மிடமிருந்து பிள்ளைகளும், பிள்ளைகளிடமிருந்து நாமும் அறிந்துகொள்வது நல்லது. நாம் அறியாத பல விஷயங்களுக்கு இணையதளம் பதில்களை வைத்திருக்கிறது. கேள்வியைக் கேட்டால் தகவல்கள் குவிகின்றன. அந்த வகையில் இதுவரை நாம் அறியாத பல விஷயங்களுக்கு இந்தப் புத்தகம் விடைகளை வைத்திருக்கிறது. சின்ன விஷயமாகத்தான் இருக்கும். ஆனால், அட, அப்படியா என்று நமக்குள் வியப்பை ஏற்படுத்தும். இவ்வளவு நாட்களாக இதைத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் ஏற்படும். இப்போதாவது தெரிந்துகொண்டோமே என்ற மனத் திருப்தியை ஏற்படுத்தும். இசை, இலக்கியம், விளையாட்டு, வாழ்க்கை முறை என்று பல்வேறு தளங்கள் குறித்து இந்த புத்தகம் தகவல்களை அள்ளித் தருகிறது. தகவலுக்குரிய படங்களைத் தேடிப்பிடித்து வைத்திருப்பது படிக்க சுவாரசியத்தை ஏற்படுத்தும்.
Reviews
There are no reviews yet.