Description
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற புரட்சியாளராக கருதப்படுபவர் பகத் சிங். தியாகி பகத்சிங் என்று அழைக்கப்படுபவர். இவருடைய குடும்பம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பம். இவருடைய சித்தப்பாக்கள் இருவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சித்திரவதைக்கு ஆளானவர்கள். இரண்டு சித்திகள் கணவரை இழந்து வாழ்ந்தார்கள். சிறுவனாக இருந்தபோதே பிரிட்டிஷ் எதிர்ப்பாளனாக உருவானார் பகத். படிக்கும் காலத்தில் புரட்சிகர அமைப்புகளை தீவிரமாக படித்தவர். மார்க்ஸின் கொள்கைகளை படித்தார். பல்வேறு புரட்சிகர அமைப்புகளில் தொடர்பு வைத்திருந்தார். பின்னர் இந்தியாவின் முன்னணி புரட்சியாளர்களில் ஒருவராக உருவானார். சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கியவர். லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடத்தியவர். அந்த ஊர்வலத்தில் போலீஸ் தடியடி நடத்தியதில் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றவர். நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கியவர். அதில் தானாகவே கைதான பகத்சிங் தனது 23 ஆவது வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த்தியாகம் செய்தார். உயிர்த்தியாகம் செய்வதையே தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்த பகத் திருமணமே செய்து கொள்ளவில்லை. நவீன இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர். இவருடைய வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.