Description
சூரிய மண்டலத்தில் உள்ள 8 கிரகங்களில் பூமிதான் அற்புதமானது. இங்குதான், விதம்விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. வகைவகையான தாவரங்கள் வளர்கின்றன. காற்று இருக்கிறது. அது தென்றலாகவும் புயலாகவும் வீசுகிறது. எரிமலைகள் இருக்கின்றன. பல்வேறு வடிவங்களில் தண்ணீர் இருக்கிறது. உயிரினங்களில் பறப்பவை இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ விதம். நீந்துகிறவை இருக்கின்றன. அவையும் பலவிதம். படிக்கிறவை எழுதுகிறவையும் இருக்கின்றன. ஆம். மனிதர்களைத்தான் கூறுகிறேன். மனிதர்கள் இயற்கையை ஆள்கிறார்கள். அல்லது ஆள முயற்சி செய்கிறார்கள். பூமி தோன்றிய கதை நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகிக் கொண்டே போகிறது. ஆம். புதிது புதிதாய் வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகின்றன. நமது பூமி இப்போதிருப்பதை விட இன்னும் சிறிதாகவும் அடர்த்தி குறைவானதாகவும் இருந்திருந்தால் உயிர்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. பூமியின் இணைப்புத் தட்டுகள்தான் உயிரினங்கள் வசிப்பதற்கு வகை செய்கின்றன. கனமான தட்டுகளும் மெல்லிய தட்டுகளுமாக பூமி இணைக்கப்பட்டுள்ளது. அவைதான் கண்டங்களை உருவாக்குகின்றன.
புதிரான பூமி 4 பூமியின் புதிர்கள் மலைகள் உருவாகவும் கடலுக்கு அடியில் பள்ளத்தாக்குகள் உருவாகவும் அவைதான் காரணமாக இருக்கின்றன. மெல்லிய நிலத்தட்டுகள் எளிதில் நகரக்கூடியவை. அவை நகர்வதால்தான் பல நூறுகோடி ஆண்டுகளாக ஒரு செல் உயிரிகளில் இருந்து இப்போதுள்ள எத்தனையோ உயிரினங்கள்வரை உருவாகின. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த டயானா வாலென்சியா என்ற விண்ணியலாளர் நடத்திய ஆராய்ச்சி முடிவில் ஒரு விஷயம் தெளிவாகி இருக்கிறது. நமது பூமி உருவான தொடக்க காலத்திலிருந்தே உயிரினத்துக்கு ஏற்றஅமைப்புடன் இருந்திருக்கிறது. உயிரினம் வாழ்வதற்கான சூழ்நிலையுடன் உருவாகி இருக்கிறது. பூமியைப் போல பெரிதான, இங்குள்ள நிலத்தட்டு அமைப்புகளுடன் கூடிய வெளி கிரகங்களிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சூரிய மண்டலத்தில் பூமி மட்டுமே மிகப்பெரிய பாறைக்கிரகம். வெள்ளி கிரகம் உள்ளிட்ட வேறு சில பாறைக்கிரகங்கள் உயிர்கள் வாழ வாய்ப்பு இல்லாதபடி சிறியதாகவோ, தண்ணீர் இல்லாமலோ சுற்றுகின்றன. செவ்வாய்க் கிரகத்திலும் நிலத்தட்டு இணைப்புகள் இல்லை. எனவே, அந்தக் கிரகத்தில் மலைகள் வளர்வதில்லை. உருவ அமைப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் போன்ற கிரகங்கள் முழுக்க முழுக்க வாயுக்களால் ஆகியிருக்கின்றன. எந்த ஒரு கிரகமும் அதிகபட்ச வெப்பமாக இருக்கக் கூடாது. அதுபோல அதிகபட்ச குளிராகவும் இருக்கக்கூடாது.
மிதமான தட்பவெப்பம் பூமியில்தான் நிலவுகிறது. வெளிப் பால்வீதிகளில் இதுவரை பூமியைப் போல 10 ஆதனூர் சோழன் 5 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இப்போதுள்ள தொழில்நுட்பப்படி அவற்றை ஆய்வு செய்ய இயலவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அவற்றில் உயிரின்ங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய முடியும். பூமிக்கு ஆபத்து ஏற்படும் காலத்திற்குள் அதுபோன்ற வேறு பூமி கண்டறியப்பட்டால் அங்கு மனிதன் குடியேறக்கூடும். அந்தக் கிரகத்திற்கு செல்வதற்கு வசதியாக அதிவேக வாகனங்களையும் மனிதன் தயாரித்து விடுவான். ஒளியின் வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் பயணிக்கக் கூடிய வாகனங்களை தயாரிக்க முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. அதெல்லாம் நடக்கும். நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது நமது பூமியின் அதிசயங்களையும் புதிர்களையும் அறிந்து கொள்வோம். இங்கே தரப்பட்டுள்ளபுதிர்களும் அவற்றுக்கான பதில்களும் வியப்பூட்டுகின்றன. தமிழில் முதன்முறையாக தொகுக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் வரிசையில் இன்னும் நிறைய வரும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கலாம். இதில் உள்ள விஷயங்கள் வழக்கம்போல உங்கள் அறிவுப் பசிக்கு தீனிபோடலாம்.
Reviews
There are no reviews yet.