Description
இந்தத் தலைப்பு சிலருக்கு பிடிக்காமல்கூட போகலாம். இந்திய கிரிக்கெட்டின் மானம் காத்த மாவீரன் என்று டோனியை அழைப்பது கொஞ்சம் அதீதமாகத்தான் இருக்கும். கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற மிகப்பெரிய சாதனையாளர்களால் இந்திய கிரிக்கெட்டின் மானம் காப்பாற்றப்பட வில்லையா என்று அவர்கள் கேட்பார்கள். அவர்கள் தங்களுடைய பெருமையைத்தான் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆம். உலகிலேயே அதிக ரன்களைக் குவித்தவர்கள். அதிக சதங்களை அடித்தவர்கள் என்று அவர்களுக்குத்தான் பெருமை கிடைத்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் உலக சாதனை படைத்திருக்கிறார் என்றுதான் சொல்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி சோப்ளாங்கி அணியாக இருந்து, அல்லது அணியை சோப்ளாங்கியாக மாற்றிவிட்டு தான் ஒருவர் மட்டும் சாதனை புரிவது பெருமையாக இருக்க முடியாது. தலைமைப் பண்பு அவசியம். சத்திரிய புருஷர்களுக்குத்தான் அந்த பண்பு இருக்கும் என்பதை டோனி நிரூபித்தார். ஆம். கபில்தேவுக்கு பிறகு இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியை நம்பர் ஒன் அணி என்று உலகம் ஒப்புக்கொள்ளச் செய்துள்ளார். இதை யாரும் மறுக்கமுடியாது. பிராமணியம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் காலமெல்லாம் பிற்படுத்தப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த, அதிலும் பின்தங்கிய ஒரு சிறு நகரத்தில் உயர்தர பயிற்சி கிடைக்கப்பெறாத டோனி கூனிக்குறுகிக் கிடந்த இந்திய அணியை நெஞ்சுயர்த்தி நிமிரச் செய்திருக்கிறார்.
Reviews
There are no reviews yet.