ISBN
978-93-88398-93-0
Publisher
Shanlax Publications
கல்வியியல் மதிப்பிடல்
ISBN
978-93-88398-93-0
Publisher
Shanlax Publications
Pages
XVI+136
Year
2019
Book Format
Paperback
Language
Tamil
Size
7.25 In x 9.5 In
Category
General
₹225.00
மதிப்பீடு என்பது ஒரு சிக்கலான, மற்றும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத ஒன்று. ஆனால் கல்வி செயற்பாட்டிற்கு மிக அவசியமான ஒன்றாகும். இதை கருத்தில் கொண்டுதான் “கல்வியியல் மதிப்பிடல் – Educational Evaluation” என்ற நூலில் பதினான்கு பாடப்பகுதிகளை அமைத்து புதிய தகவல்களையும், விரிவான கருத்துக்களையும் மிக எளிய நடையில் அமைத்துக் கொடுத்துள்ளோம். இன்றைய தலைமுறையினர், அறிவியல் தொழில் நுட்பத்திலும், ஆராய்சசி மனப்பான்மையிலும் வளர்ந்து வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு ஏற்றவிதத்தில் அழகான, அதிகமான கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக பாடப்பகுதிகளை அமைத்து அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தகவல்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். இன்றைய பயிற்சி மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக உருவாவது மட்டுமல்லாது NET, SET, TNET போன்ற தேர்வுகளை எழுதப்போகும் பிற ஆசிரிய மாணவர்களுக்கும், இந்நூல் மிகுந்த பயனளிக்கும் வகையில் கணினி இணையத்திலிருந்தும், பல்வேறு நூல்களிலிருந்தும் தேவையான கருத்துக்களை திரட்டியளித்து இந்நூலைப் படைத்துள்ளோம்.
மதிப்பீடு செய்பவரின் பின்னணி மற்றும் பயிற்சி அடிப்படையில் பல உற்று நோக்கியறிதல்களால் எடுக்கப்படும் ஒரு தீர்ப்பு அல்லது முடிவு கல்வியியல் மதிப்பீடு (Educational Evaluation) ஆகும். கல்விச் செயல்பாடுகளில், ஒரு குழந்தையின் பல்வேறு அம்சங்களையும், வளர்ச்சிகளையும் அறிய தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு மதிப்பீடு ஆகும். மதிப்பீட்டிற்குப் பின்பு, தகுந்த ஆலோசனைகளின் மூலம் அக்குழந்தையை முழு ஆளுமை வளர்ச்சிக்கு வகுப்பாசிரியர் தயார்படுத்துகிறார். அதாவது ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளியின் நோய்களைக் கண்டறிந்து. அதற்குத் தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்குவது போல, வகுப்பாசிரியர் கற்றலின் குறை/நிறைகளை மாணவர்களிடம் கண்டறிந்து தகுந்த வழிமுறைகள் மூலம் அக்குறைகளை நிவர்த்தி செய்கிறார்.
ஒரு முழு கல்விஅமைப்பு என்பது சில குறிப்பிட்ட நோக்கம் மற்றும் குறிக்கோள்களைக் கொண்டது. (எ.கா) பண்பாடு, சமுதாயம், தொழில், மனவெழுச்சி நோக்கங்கள். வேறுவிதமாகக் கூறுவோமானால் கல்வி என்பது ஒரு நபரின் அனைத்துவகையான முன்னேற்றத்தினையும் குறிக்கும். நோக்கம் என்பது ஒரு புள்ளி அல்லது சாத்தியமான சாதனையின் இறுதிப் பார்வையாகும். இறுதி நோக்கம் என்பது ஒரு மாணவன் எவ்வளவு தூரம் கல்வி என்னும் திசையில், செல்ல இயலும் என்பதைக் குறிக்கும். கல்வியை நோக்கமாகக் கொண்ட நோக்கங்கள் கல்வித்திட்டமிடலுக்கு உதவுகின்றன. எந்தவொரு ஆசிரியர் மாணவர்களின் குறிக்கோள்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறாரோ அவரே அக்குறிக்கோள்களை மறுவடிவம் கொடுக்கவும் செய்வார்.
© Shanlax
Reviews
There are no reviews yet.