Publisher
SIBI Pathippagm
Category
General
பிடல் காஸ்ட்ரோ
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
192
Year
2016
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹275.00
கடந்த ஐம்பது ஆணடுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்தது. அமெரிக்காவில் 22 அதிபர் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்? அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது. வாழ்ந்து முடித்த தலைவர்களின் வரலாற்றை எழுதுவதிலேயே குளறுபடிகள் வந்து விடுகின்றன. வாழ்ந்து கொணடிருக்கிற, அதுவும் சர்ச்சைக்குரிய வாழ்க்கைக்கு சொந்தக்காரரான காஸ்ட்ரோவின் வாழ்க்கையை பிசிறின்றி எழுத வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதி முடித்துள்ளேன். காஸ்ட்ரோவின் இளவயது வாழ்க்கை குறித்து, அவரே பல விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்து இருக்கிறார். அதேசமயம், அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து வேறு சிலர் எழுதிய கட்டுரைகளை அவர் பாராட்டி இருக்கிறார். அப்படிப்பட்டவர்களின் எழுத்துக்களில் கிடைத்த தகவல் களையும் இணைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. குழந்தைப்பருவம், இளவயது வாழ்க்கை, புரட்சியாளராய் உருவான விதம், கியூபா மீதான காஸ்ட்ரோவின் அக்கறை, கியூபாவை மீட்க அவர் சொந்தமாக உருவாக்கிய புரட்சிகரத் திட்டம் ஆகியவை குறித்து இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. காஸ்ட்ரோவைப் பற்றிய புதிய பரிமாணத்தை இந்த நூல் தரும். அவரைப்பற்றிய புதிய தகவல்கள் நிச்சயமாக இதில் நிறைந்திருக்கிறது என்பதை உத்தரவாதப்படுத்த முடியும்.
இந்த நூலுக்காக நான் நிறைய விஷயங்களை தேடிச் சேர்த்திருக்கிறேன். அவை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும். காஸ்ட்ரோவைப் பற்றி எழுதுவதாக கூறிக்கொண்டு அவரது இமேஜை சிதைக்கும் எழுத்து வியாபாரிகளின் நோக்கத்தை இந்த நூல் நிச்சயமாக அடையாளம் காட்டும் என்று நம்புகிறேன். சே குவேரா, காஸ்ட்ரோ உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் வாழ்க்கைக் கதை முழுமையாக, சுவாரஸ்யமாக தொகுக்கப் படவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதுகுறித்து, ஜனசக்தி நாளிதழில் பணிபுரியும்போது, பொறுப்பாசிரியர் திரு. ராயப்பாவிடம் பேசியிருக்கிறேன். அவருக்கும் அந்த ஆதங்கம் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே, காஸ்ட்ரோவைப் பற்றிய நூல்கள் அனைத்தும் உள்ளன என்று அவர் கூறினார். எனவே, அந்த மாபெரும் தலைவனின் எதார்த்தமான வாழ்க்கையை பதிவு செய்யும் வேலையை எடுத்துக்கொண்டேன்.
புரட்சி வெற்றிபெற்ற தொடக்க ஆண்டுகளில், புரட்சியைக் காப்பாற்ற, கியூப மக்களை தயார் படுத்தினார் காஸ்ட்ரோ. அதற்காக அவர் மூன்று ஆண்டுகளில் ஐந்து முக்கிய உரைகளை நிகழ்த்தினார். மிக நீண்ட அந்த உரைகளின் சாரம் இதுவரை தமிழில் வந்துள்ளனவா? என்று தெரியவில்லை. ஆனால, நான் இந்த நூலில் வீரம் செறிந்த அந்த உரைகளின் சாரத்தை பதிவு செய்துள்ளேன்.காஸ்ட்ரோ ஓய்வு பெறப்போவதாக அறிவித்துவிட்டாதால், அடுத்து அதிபராக வரவிருக்கும் ராவுல் குறித்த புதிய தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
© Shanlax
Reviews
There are no reviews yet.