Description
1969 ஆம் ஆண்டு லிபியாவில் மன்னராட்சியை தூக்கியெறிந்துவிட்டு தனது 27 ஆவது வயதில் நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் கடாஃபி. அப்போதிருந்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை துடைத் தெறிவதில் உறுதியாக இருந்தார். அரேபிய கலாச்சாரத்தில் ஊறித்திளைத்த நாட்டை சோஷலிஸ பாதையில் திருப்பினார். உலகின் ஏழாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான லிபியாவின் அனைத்து வளங்களும் மக்களுக்காகவே பயன்பட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டார். அங்கு குடிமக்கள் எல்லோருக்கும் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச வீடு, கிட்டத்தட்ட இலவச உணவு என்று அவருடைய சாதனைகள் மலைக்க வைத்தன. முதலாளித்துவ நாடுகளுக்கு இது எப்படி பிடிக்கும். எதிரியானார் கடாஃபி. 22 ஆண்டுகள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் லிபியாமீது தடை விதித்தது அமெரிக்கா. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலை நிர்ப்பந்தம் செய்து அந்த நாட்டின் மீது 11 ஆண்டுகள் பொருளாதார தடை விதிக்கச் செய்தது அமெரிக்கா. ஆனாலும் லிபியாவின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தையும் அமெரிக்காவுக்கு எதிராக திரட்டினார் கடாஃபி. ஆப்பிரிக்க யூனியன், அரபு லீக் என்று அவருடைய முயற்சிகள் வெற்றி பெற்றன. மாபெரும் செயற்கை நதித்திட்டம் என்ற பெயரில் சகாரா பாலைவனத்தின் அடியில் இருக்கும் நன்னீர் பரப்பை அவர் மக்களுக்கு பயன்படுத்திய விதம் கின்னஸ் சாதனையாக இடம் பெற்றுள்ளது.
5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் 12 அடி குறுக்களவுள்ள பைப்லைன் மூலம் லிபியாவின் வட பகுதியில் 5 மாபெரும் செயற்கை ஏரிகளில் நிலத்தடி நீரைத் தேக்கி லிபியர்கள் அனைவருக்கும் அடுத்த 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் இல்லாத வகையில் நிறைவேற்றப்பட்ட திட்டம் அது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி ஐ.நா.சபையில் முதன்முறையாக பேசினார். அவருக்கு 15 நிமிடங்கள் மட்டுமே தரப்பட்டன. ஆனால், 145 நிமிடங்கள் அவர் பேசிய பேச்சு ஐ.நா. வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை அல்கொய்தா அமைப்புக்கு நிகராக அவர் குற்றம் சாட்டினார். “இது ஒரு டெர்ரர் கவுன்சில். அல்கொய்தா மட்டும் டெர்ரர் அமைப்பு அல்ல. பயங்கரவாதம் எத்தனையோ வடிவங்களில் இருக்கிறது. கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களுக்கான வீட்டோ அதிகாரம் மிகப்பெரிய பயங்கரவாத ஆயுதம்” என்றார். இராக் மீது போர் தொடுத்ததற்காக புஷ், டோனி பிளேர் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் ஐ.நா.விதிகள் அடங்கிய புத்தகத்தை அவர் கிழித்தெறிந்தார்.
Reviews
There are no reviews yet.