Be the first to review “Hollywoodai Kalakkiyavargal” Cancel reply
Description
கவிஞனாக, கதாசிரியனாக உருவாக வேண்டும் என்று, இளவயதில் கனவு கண்டவன் நான். கவிஞனாக என்னை நிரூபித்தேன். பிறகு, பத்திரிகையாளனாக மாறியவுடன் எனக்குக் கிடைத்த பரந்துபட்ட வாய்ப்புகள், நான் மேலும் மெருகேற துணையாக இருந்தன. தீக்கதிரில் பணிபுரியும்போது, அறிவியல் கட்டுரைகளை எழுதி அதை புத்தகமாக வெளியிட்டேன். எனது முதல் நூலுக்கே எழுத்தாளர் திரு. சுஜாதாவின் பாராட்டு கிடைத்தது. கவிதை எழுதுவதை விட்டு, அறிவியலில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினார். வசிஷ்டர் வாயால் பாராட்டுக் கிடைத்தால் பெருமையாகத்தானே இருக்கும். அறிவியல் எழுதுவதற்கு பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்ததும் அந்தத் துறையில் கவனம் செலுத்தினேன். அடுத்து நான் வெளியிட்ட இன்னொரு வானம் என்ற நூலை 2006 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக தேர்வு செய்தார் சுஜாதா. இந்நிலையில்தான், சென்னை தினமணி ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தபோது, தினமணி கதிரின் பொறுப்பாசிரியர் திரு. சிவக்குமாரிடம் பேசினேன். அப்போது, ஹாலிவுட்டை இப்போது கலக்கிவரும், முன்னர் கலக்கி ஓய்ந்த நடிகைகளைப் பற்றி எழுதும்படி யோசனை தெரிவித்தார். 4 ஹாலிவுட்டை கலக்கியவர்கள் ஞாயிறு கொண்டாட்டம் பகுதிக்காக, ஜனரஞ்சகமாக எழுதத் தொடங்கியவைதான் இந்த கட்டுரைகள். ஆனால், சில வாரங்கள் மட்டுமே எழுதினேன்.
Reviews
There are no reviews yet.