Description
இந்தியாவில் இன்றைய தலைமுறையினர் நாட்டை நிலைநிறுத்தும் வருங்காலத் தூண்களாக விளங்குகின்றனர். அத்தகைய மாணவர்களின் மனநிலையை மனதில் கொண்டுதான் “கல்வி உளவியல்” என்ற இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் பதினான்கு பாடப்பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் கீழ் ஏராளமான தலைப்புகளில் பாடக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
உளவியல் அறிஞர்கள், மற்றும் அவர்கள் செய்த சோதனைகளின் புகைப்படங்களை மாணவர்கள் கண்ணோக்கும்பொழுது உளவியல் கருத்துக்கள் மாணவர்களின் மனதில் நிலைத்து நிற்கும் படியாகவும், பொருத்தமான படங்களுடன் உளவியல் பாடக்கருத்துக்களை மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கற்றுக் கொள்ளும் வகையில் சீரிய நடையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
‘கல்வி உளவியல்’ என்னும் இந்நூலைப் படைத்ததன் முதன்மையான நோக்கமே மாணவர்களின் மனப்பான்மை, செய்திறன்கள், ஆர்வங்கள் நாட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் கற்பிக்கும் முறைகளை மாற்றியமைத்து மாணவர்களைச் சிறந்த ஆளுமைப்பண்புடையவர்களாக மாற்றுவதே இந்நூலின் சிறப்பாகும்.
அனைத்து ஆசிரியப்; பயிற்சி மாணவர்களும் அவசியம் கற்றறிய வேண்டிய பாடங்களுள் முதன்மையானதாகவும், கற்கும் சூழ்நிலையில் ஆசிரியரும் ஒரு முக்கியக் காரணியாக விளங்குவதால் அவர்களுக்கும் இந்நூல் பெரிதும் துணைபுரியும்.
Reviews
There are no reviews yet.