மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச் செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய மக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்ற நேர்மையால் கவர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து, தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து, எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர். தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர். ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம் போகமுடியாது என்ற நிலையை போக்கியவர். கல்விக் கண் திறந்தவர்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக, முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர். பதவியை பெரிதாக நினைக்காதவர். முதல்வர் பதவியை துச்சமாக தூக்கி எறிந்தவர். நேருவுக்கு பிறகு இரண்டு முறை நாட்டின் பிரதமர்களை முடிவு செய்தவர். லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் பிரதமர்களாக தேர்வு செய்தவர். ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் உயிராக கருதியவர். கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். தனக்கென்று சொந்தமாக வீடுகூட இல்லாதவர். ஒரு செண்ட் நிலம் கூட சம்பாதிக்காதவர். காந்தியின் கடைசி வாரிசாக வாழ்ந்து, அவருடைய பிறந்த நாளிலேயே மரணம் அடைந்த மகத்தான தலைவர். காமராஜ் ஒரு சகாப்தம். பள்ளிகள் இருக்கும்வரை அவர் புகழ் இருக்கும். அணைகள் இருக்கும் வரை அவர் புகழ் அணையாது.
Reviews
There are no reviews yet.
Be the first to review “Perunthalaivar Kamarajar” Cancel reply
Reviews
There are no reviews yet.