எல்லா குழந்தைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. எனவே, எல்லா மனிதர்களும் ஒரேமாதிரி வளர்வதில்லை. குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளே அவர்களுடைய பழக்க வழக்கங்களை தீர்மானிப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நாம் நினைத்தால் ஓரளவு செப்பனிட முடியும். ஆம். அந்தக் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ற சூழ்நிலையை நாம் அமைத்துத் தரமுடியும்.
குழந்தைகளை மட்டுமின்றி, பெரியவர்களையும் கூட நல்வழிப்படுத்த முடியும். எதையெதைச் செய்தால் வாழ்க்கை சிறக்கும். எதையெதைத் தவிர்த்தால் நிம்மதி கிடைக்கும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய வழிமுறைகள் எளிமையானவை.
கடைப்பிடிக்க எளிதானவை. அத்தகைய எளிய வழிகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன். படங்களுடன் கூடிய இந்தப் புத்தகம் நல்ல பயனளிக்கும். நல்ல குழந்தையை உருவாக்குவதற்கும், நல்ல அபபாவாக மாறுவதற்கும் இதில் வழிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதுபோல வெறுப்புணர்வைப் போக்கி மனநிம்மதியுடன் வாழ்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், சமூகத்தில் அனைவருடனும் சகிப்புத்தன்மையுடன் இணக்கமாக வாழ்வதற்கும் இந்தப் புத்தகத்தில் வழிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
Reviews
There are no reviews yet.
Be the first to review “Kuzhanthaigalai Nallavarkalaha Valarppathu Yepadi?” Cancel reply
Reviews
There are no reviews yet.