சிங்கப்பூரை கண்டுபிடித்தவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூரை உருவாக்கியவர் நிச்சயமாக லீ குவான் இயூதான்! நாட்டை தனது வீடாக பாவிக்கும் ஒரு நபருக்குத்தான் அதன் வளர்ச்சியில் ஈடுபாடு இருக்கும். ஒரு தலைவரை தங்களுடைய தந்தையாக பாவிக்கும் மக்களால்தான் ஒரு நாட்டை இவ்வளவு அற்புதமாக கட்டமைத்து பாதுகாக்க முடியும்.
சிங்கப்பூரின் வளர்ச்சியில் லீ குவான் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாரோ, அந்த அளவுக்கு அந்த மக்களும் அவருக்கு பக்கபலமாக நின்றனர். கடற்கொள்ளையரின் புகலிடமாக இருந்த சிங்கப்பூர் தீவை, பிரிட்டிஷார் வந்து ஒரு நகரமாக கட்டமைத்தனர் என்றால், அந்த குட்டித் தீவு நகரை உலகமே வியக்கும் நாடாக மாற்றிக் காட்டியவர் லீ குவான் இயூ. சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக கருதப்படும் சிங்கப்பூரை, பல்வேறு இனங்களும் வேறுபாடுகளை மறந்து வாழும் ஒரு குடும்பமாக மாற்றியவர் லீ.
லீயை தங்களுடைய குடும்பத் தலைவரைப்போலவே மக்கள் கருதினர். அதனால்தான், 1965ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் லீ குவானின் தலைமைக்கும், பின்னர் அவர் உருவாக்கிய மக்கள் செயல் கட்சிக்கும் எதிர்ப்பே இல்லாத ஆதரவை அளிக்கின்றனர். வளரும் நாடுகளுக்கு சிங்கப்பூர் வரலாறு மிகச்சிறந்த முன்மாதிரியாக உருவாக்கிய தலைவனின் வாழ்க்கை கதை இது! இந்த நூலை எழுத ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை வழங்கிய நரசிம்மன் நரேஷ், சுரேஷ் என்ற சுந்தம்பட்டியான் ஆகியோருக்கு எனது நன்றி!
Reviews
There are no reviews yet.
Be the first to review “Lee Kuan Yew” Cancel reply
Reviews
There are no reviews yet.