உணவே மருந்து (Unave Marunthu) என்ற நிலை மாறி, மருந்தே உணவு (Marunthe Unave) என்று பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்படுதல், சராசரி மனித ஆயுள் அதிகரித்தல் என நவீன மருத்துவம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும் கூட, தொற்றா நோய்களான வாழ்வியல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், இளவயதிலேயே மருந்துகளைச் சார்ந்தே வாழ்க்கை அமைகிறது. உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, இதயநோய்கள், சர்க்கரை நோய், தைராய்டு குறைபாடு, ஊட்டச்சத்தின்மை என தொற்றா நோய்களின் தாக்கம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது.
இவ்வளவு மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா? உணவில் இந்த நோய்களை கட்டுப்படுத்த முடியாதா? என்பதற்கு பதிலளிப்பது தான் இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.