Description
உங்கள் கைகளில் தவழும் புத்தகம் கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் சரிதம் அல்ல, அல்லது மார்க்சியத் தத்துவத்தை எளிய முறையில் விளக்குகின்ற நூலும் அல்ல. இப்புத்தகம் மார்க்சியத்துக்கு ஒரு வகையான “அறிமுகம்” என்று கூறலாம். வேறு எத்தத்துவத்தைக் காட்டிலும் அதிகமாக மனிதகுலத்தின் விதியை நிர்யித்திருக்கின்ற இந்த மாபெரும் தத்துவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விவரிக்கின்ற நூல் இது.
இளைஞரான மார்க்சின் தேடல்கள், சிந்தனைகள், உணர்ச்சிக் குழுறல்கள் என்ற உலகத்துக்குள், அவருடைய நெருப்புப் போன்ற கருத்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்த படைப்புத் தன்மை கொண்ட சோதனைச் சாலைக்குள் தன்னோடு வாசகரையும் அழைத்துச் செல்வதற்கு, இந்த உலகத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும்படி வாசகரை ஊக்குவிப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார். ஏனென்றால் ஒரு மேதையுடன் ஆன்மிக ரீதியில் தேடல்களின் பாதையைப் பின்தொடர்வதைக் காட்டிலும் அதிக வளமான சாதனம் வேறில்லை
Reviews
There are no reviews yet.