Be the first to review “Maziniyin Manithan Kadamai” Cancel reply
Description
மாஜினி, கவிபுனையாத ஒரு கவிஞன்; மகான் கவிஞன். இவன் அரசியலிலே சேராதிருந்தால், இத்தாலிய கவிதா மண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் வர்ஜிலைப் போலவும், தாந்தேயைப் போலவும், மூன்றாவது நட்சத்திரமாகப் பிரகாசித்துக் கொண்டிருப்பான். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு இத்தலி, ‘தனது தலையை இரண்டு முழங்கால்களுக்கு நடுவே புதைத்துக்கொண்டு’ அழுத குரல், துன்பத்தைக்கண்டு துடிக்கும் இவனுடைய இருதயத்தைப் பலமாக மோதியது. அந்த மோதுதலினின்று கவிதா மலர்கள் உண்டாகவில்லை; புரட்சிப் பொறிகளே பிறந்தன.
Reviews
There are no reviews yet.