மகாத்மா காந்தியின் வாழ்க்கை வியப்பூட்டக் கூடியது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில், அவர் அமைத்துக்கொண்ட வாழ்க்கை முறை முற்றிலும் புதுமையானது. அந்த மகாத்மாவின் வாழ்க்கையை எளிமையாக புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மயிர்க்கால்கள் கூச்சறியும். அடிமையாய் கிடந்த இந்தியாவின் புதல்வர் களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த தன்மானத் தலைவன் நேதாஜி. விடுதலை என்பது அடிமைப்படுத்தியவ னிடம் கேட்டுப் பெறுவதல்ல. அவனிடம் இருந்து எடுத்துக் கொள்வது என்று முழங்கியவர். அந்த மாபெரும் தலைவனின் மகத்தான வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இந்த நூல் உள்ளடக்கியிருக்கிறது.
லால் பகதூர் சாஸ்திரி குட்டையானவர் ஆனால், நேர்மை, எளிமை, ஒழுக்கம் ஆகியவற்றில் மிகவும் உயர்ந்தவர். பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கி, லாகூர் வரை விரட்டியவர் சாஸ்திரி. அவருடைய வாழ்க்கை இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துடன் இந்தியாவின் தீரத்தையும் நமக்கு விளக்குகிறது. ஒரே புத்தகத்தில் மூன்று தலைவர்களின் வாழ்க்கையை முழுமையாக தரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை வெளியிடுகிறோம். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்
Reviews
There are no reviews yet.
Be the first to review “Naadu Kaththa Nallavargal” Cancel reply
Reviews
There are no reviews yet.