ஆசிரியர் மேலப்பனையூர் கரு.இராசேந்திரன் அவர்கள் புதுக்கோட்டை வட்டார வரலாற்றாய்வுக்கு மிகுந்த பங்களிப்புச் செய்துள்ளார். பல குமிழ்க் கல்வெட்டுகளை ஆய்வுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழகத் தொல்லியல் கழகத்தின் ஓர் ஆர்வமிக்க உறுப்பினராகச் செயலாற்றி, ஆவணம் இதழில் ஒவ்வோராண்டும் பல புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நூலில் உள்ள கல்வெட்டுகள் எட்டாம் நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தைசி சேர்ந்தவை. பெரும்பாலானவை கி.பி. 10-13ம் நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்டவை. பல கல்வெட்டுகள் நீர்பாசன அமைப்புகள், குமிழி, மணவாளக்கால், மடை, கலிங்கு, குளம், ஊருணி, முதலியன – பற்றியவை. புதுக்கோட்டை வரலாற்றுக்குப் பல புதிய செய்திகளை இந்நூல் தருகிறது. இந்தக் கல்வெட்டுத் தொகுப்பு கல்வெட்டு ஆர்வலர்களுக்கு உறுதுணையாகவும் தூண்டுதலாகவும் வழிகாட்டும்.
ஆசிரியர் மேலப்பனையூர் கரு.இராசேந்திரன் அவர்களால் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் ஆவணம், தினமணி, தினமலர் போன்ற சஞ்சிகைகளில் வெளி வந்தவைகளும் இதுவரை எதிலும் வெளிவராதவைகளுமாக சுமார் 250 கல்வெட்டுகள் இப்புத்தகத்தில் தொகுக்கப் பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.
Be the first to review “Pudukkottai Vattara Kalvettukal” Cancel reply
Reviews
There are no reviews yet.