Description
‘Sonnet’ என்னும் இத்தாலி நாட்டு இலக்கிய வகைமையைத் தமிழுக்குக் கொணரும் முயற்சியாக ‘சந்தமெட்டாறு’ என்னும் ஒரு புதிய சொல்லாக்கத்தோடு ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு அறிமுகமாகிறது இப்புதுவகை இலக்கியம்.
சேக்ஸ்பியரின் சானட்டை பெயர்க்கும் போது. இப்பாவகையை அங்ஙனமே தமிழுக்கு கொணர எண்ணியதால் பதினான்கு வரிகளையும், பா அமைப்பினையும் ஒவ்வொரு வரியிலும் சேக்ஸ்பியர் என்ன செய்திருந்தானோ, அவன் உள்ளத்தை எங்ஙனம் யாத்திருந்தானோ அதை அங்ஙனமே மொழி மாற்றம் செய்துள்ளார் ஆசிரியர். அதற்காக ஆங்கிலச் சொற்களுக்கு அதே பொருள் கொண்ட தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த எண்ணாது, சேக்ஸ்பியர் தமிழனாகப் பிறந்து, தமிழ்மொழியில் சானட் படைக்க முற்பட்டால் அவன் என்ன செய்திருப்பானோ, எப்படி யாத்திருப்பானோ அப்படியே தன் தமிழ் கடமையை நிறைவேற்றியுள்ளார். ஆசிரியர் தன்னை சேக்ஸ்பியராக மனதில் வரித்துக் கொண்டு இப்பாடல்களைத் தமிழுக்குக் கொணர்ந்துள்ளார்.
இந்த புத்தகத்திற்க்கு தமிழ் பெயராக ‘சந்தமெட்டாறு’ என்பது மிக பொருத்தமாக அமைந்துள்ளது. சானட் என்பது 14 வரிகளையுடைய ஒரு பாடல். Sonnet என்ற ஆதிச் சொல்லிற்கு இத்தாலியில் இசைப்பாடல் என்று பொருள். அதுவே இலத்தீன் மொழியில் Sonus என்றால் ஒலி – sound என்ற சொல்லிலிருந்து உருவாகிறது. Son – என்றால் Song எனவும் கொள்ளப்படுகிறது. இவற்றின் தோற்றத்தையும், பா அமைப்பையும் மனதிற் கொண்டு சந்தமெட்டாறு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்தம் ‘Sonnet’ என்னும் இத்தாலி நாட்டு இலக்கிய வகைமையைத் தமிழுக்குக் கொணரும் முயற்சியாக ‘சந்தமெட்டாறு’ என்னும் ஒரு புதிய சொல்லாக்கத்தோடு ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு அறிமுகமாகிறது இப்புதுவகை இலக்கியம்.
சேக்ஸ்பியரின் சானட்டை பெயர்க்கும் போது. இப்பாவகையை அங்ஙனமே தமிழுக்கு கொணர எண்ணியதால் பதினான்கு வரிகளையும், பா அமைப்பினையும் ஒவ்வொரு வரியிலும் சேக்ஸ்பியர் என்ன செய்திருந்தானோ, அவன் உள்ளத்தை எங்ஙனம் யாத்திருந்தானோ அதை அங்ஙனமே மொழி மாற்றம் செய்துள்ளார் ஆசிரியர். அதற்காக ஆங்கிலச் சொற்களுக்கு அதே பொருள் கொண்ட தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த எண்ணாது, சேக்ஸ்பியர் தமிழனாகப் பிறந்து, தமிழ்மொழியில் சானட் படைக்க முற்பட்டால் அவன் என்ன செய்திருப்பானோ, எப்படி யாத்திருப்பானோ அப்படியே தன் தமிழ் கடமையை நிறைவேற்றியுள்ளார். ஆசிரியர் தன்னை சேக்ஸ்பியராக மனதில் வரித்துக் கொண்டு இப்பாடல்களைத் தமிழுக்குக் கொணர்ந்துள்ளார்.
Reviews
There are no reviews yet.