Be the first to review “தமிழ்க் கோவை (Tamil Kovai)” Cancel reply
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பதற்கேற்ப தமிழ் உலகில் இந்நூல் கையளவு என்றாலும் அதன் பலன் அளப்பரியது. தமிழின் தொன்மைத் தொடங்கி தற்காலம் வரை தமிழ் இலக்கியப் பரப்பின் ஒவ்வொரு தளத்திலும் பயணித்து, பயனுள்ள செய்திகளைத் தொகுத்து வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ள இந்நூல் மாணவர்களின் கற்கும் திறனையும், அவர்களது தேவையினையும் மனதிற் கொண்டு திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வினா விடை என்ற அமைப்பினைத் தவிர்த்து, நூல், ஆசிரியர் என்ற பல்வேறு உட்தலைப்புகளின் கீழ் தொடர்புடைய செய்திகளைத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது இந்நூலிற்குக் கூடுதல் சிறப்பு. இத் தமிழ்க்கோவை, பல்கலைக்கழக மானியக்குழு, மாநில அரசு நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்விற்கு மட்டுமல்லாது ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான அனைத்துத் தேர்வுகளுக்கும் உங்களை ஆயத்தப்படுத்தும். தரமான நூல்களின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் இன்று மட்டுமல்ல எதிர் காலத்தினரும் பயன்கொள்ள தக்க வகையில் அமையும்.
இந்நூலைச் செம்மையான முறையில் பதிப்பித்தளித்த ஷான்லாக்ஸ் பதிப்பக உரிமையாளர் திரு சு. லட்சுமணன் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Reviews
There are no reviews yet.