Be the first to review “தாத்தா தந்த கண்ணாடி / Thatha Thantha Kannadi” Cancel reply
ஆங்கிலக் கல்விமுறை, தனியாக ஒரு தீமையாக இருக்கிறது. அந்த முறையைத் தகர்த்து நாசமாக்க என் சக்தியை நான் பயன்படுத்துகிறேன்.
ஆங்கிலக் கல்வி முறையினால் இதுவரை எந்த அனுகூலமும் கிடைத்திருப்பதாக நான் கருதவில்லை.
இதுவரை நாம் அடைந்துள்ள அனுகூலங்கள் அந்தக் கல்விமுறை இருந்தும் கூட நமக்குக் கிடைத்துள்ளன என்பதுதான் உண்மையே தவிர. அவை ஆங்கிலக் கல்வி முறையினால் கிடைத்த அனுகூலங்கள் அல்ல.”
“ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமலிருந்தாலும் உலகின் மற்ற பகுதிகளுடன் இந்தியாவும் முன்னேற்றப் பாகையில் சென்றிருக்கும். மொகலாயர் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தாலும் பல மக்கள் ஆங்கிலத்தை ஒரு மொழ முறையிலும் இலக்கியம் என்ற முறையிலும் படித்திருப்பார்கள்.
“ஆங்கில மொழியை அழிக்க நான் விரும்பவில்லை. ஆனால் இந்திய தேசியவாதி என்ற முறையில் ஆங்கிலத்தைப் படிக்கலாம். ஆங்கிலக் கல்வியானது நமது சக்தியைச் சீர்குலைத்து, நமது அறிவாற்றலை ஒடுக்கிவிட்டது. அந்த மொழியைக் கற்பதில் இந்திய மாணவர்கள் கடும் முயற்சி செய்வதன் விளைவாக அவர்களது சக்தி பாதிக்கப்படுகிறது. அது காப்பியடிப்பவர்களாக நம்மை ஆக்கியுள்ளது.”
“ஆங்கிலத்தில் சிந்தித்து, தன் எண்ணங்களைப் பிரதானமாக ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலைமை ராஜாராம் மோகன்ராய்க்கு இல்லாதிருந்தால் அவர் மேலும் சிறந்த சீரதிருத்த வாதியாகத் திகழ்ந்திருப்பார். லோகமான்ய திலகர் மேலும் சிறந்த அறிஞராக விளங்கியிருப்பார். ராஜாராம் மோகன்ராய்க்கும் லோகமான்ய திலகருக்கும் உதித்த எண்ணங்கள் அவர்களுக்கு ஆங்கில ஞானம் இல்லாதிருந்தால் உதித்திருக்கமாட்டார் என்பதை ஏற்க நான் மறுக்கிறேன். விடுதலைக் கருத்துக்களைக் கொள்ளவும். சிந்தனைச் சீரமையை வளர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று கருதுவது இந்தியாவைப் பிடித்துள்ள எல்லாவற்றிலும் மிகப் பெரியது.”
ஆங்கிலம் போதனா மொழியாக இருப்பதன் விளைவாகச் சுயமாகச் சிந்திக்கும் திறனை நாம் இழந்துவிட்டோம்.
Reviews
There are no reviews yet.