பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும் கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாக கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெற பல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்நூலின் மூலம் நாம் காணலாம். வியாபாரம் செய்து கோடீஸ்வரராகும் கனவு எல்லோருக்கும் உண்டு. ஆனால் எல்லோராலும் வியாபாரத்தில் வெற்றி பெற முடிவதில்லை. எதையும் தொடங்குவது முக்கியமல்ல தொடர்வது தான் முக்கியம். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்குரிய சில அடிப்படைதகுதிகளை அதீத வியாபார யுக்திகளாக தெளிவுற எடுத்து உரைக்கிறது இந்நூல்.
வெற்றியின் ரகசியம், உயரிய தானம் என்றால் அதிகமான மக்கள் சிரிப்பார்கள். மேலும் அதிகமான மக்கள் தாங்கள் நினைத்த அளவு வெற்றியின் அருகில் கூட நெருங்கவில்லை.
உயரிய தானம் செய் – வெற்றி பெற துடிக்கும் ஜோ என்ற துடிப்பான இளைஞனை பற்றிய கதை. ஜோ உண்மையான வெற்றியாளர் ஆனாலும் சில சமயம் அவர் எப்படித்தான் கடினமாகவும், வேகமாகவும் உழைத்தாலும் தன் உண்மையான இலக்கை அடையவில்லை என்று உணர்ந்தார். அதனால் ஒரு நாள் – ஒரு மோசமான காலாண்டு முடிவில் தனது இலக்கை அடைய – தனது சிஷ்யர்களால் சேர்மன் என்று அழைக்கப்படும் ஒரு உயர்ந்த ஆலோசகர் பிந்தார் என்பவரின் அறிவுரையைப் பெற்றார்.
அடுத்த வாரம் பிந்தார் ஜோவை உயரிய வெற்றியாளர்களுக்கு தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ஒரு உணவக உரிமையாளர், ஒரு தொழிலதிபர், ஒரு பணமதிப்பீட்டாளர், ஒரு நில தரகர் அதோடு இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பவர். பிந்தாரின் இந்த தோழர்கள் ஜோவுக்கு மிக உயரிய வெற்றிக்கான ஐந்து விதிகளையும் ஜோவோடு பகிர்ந்து கொண்டு உண்மையான தானம் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்கள்.
ஜோ, பெறுவதில் இருந்து கொடுப்பதிலும், அடுத்தவர் தேவைக்கு முதன்மைத்துவம் கொடுத்து அவர்களுடைய வாழ்கைக்கு தொடர் உதவி செய்வதிலும,; தன் பார்வையை செலுத்த பழகுவதின் மூலம் எதிர்பாராத வெற்றிக்கு வழி வகுக்கும் என்று அறிந்து கொண்டார். குதூகலத்தையும், அனுபவத்தையும் செலுத்திப் பார்த்தால் உயரிய தானம் செய் ஒரு மனமாச்சரிய மிக்க ஆர்வத்தை தூண்டும் ஒரு கதை – கொடுத்தால் தான் பெற முடியும் என்ற பழமொழிக்கு உகந்ததும் கூட.
Milton –
Really nice