தன்னம்பிக்கை…விடா முயற்சி…வாய்ப்பை பற்றிக் கொள்ளும் புத்திகூர்மை…இவை மூன்றும் இருந்தால் எவ்வளவு உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். அந்த நாளில் வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதைகளையே வியக்கவைக்கும் அளவுக்கு கணிதத்தில் ஆற்றல் பெற்றிருந்தான். யுத்த தந்திரங்களில் அவனுக்கிருந்த அறிவு பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளைக் கவர்ந்து இழுத்தது. அவனுடைய யுத்தம் அதுவரை வரலாறு கண்டிருந்த யுத்தங்களுக்கு மாறாக இருந்தது. முடியரசுகளின் கீழ் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த மக்களை விடுவிக்கவே அவனுடயை யுத்தம் பயன்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங்கோலர் களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக்குத்தான் முதலிடம். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹிட்லர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். ஜெயித்தும் காட்டினார். இன உணர்வு, வெறியாக மாறினால், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு, ஹிட்லரின் வாழ்க்கை சரியான எடுத்துக்காட்டு. அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று மிக மிக சிலருக்குத்தான் தோன்றுகிறது. அல்லது வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய மிகச்சிலரில் தனித்தன்மையுடன் நினைக்கப்படுகிறவர் சே குவேரா. வாழ்க்கையை எப்படியெல்லாம் உபயோகமாக வாழலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமானது அவரது வாழ்க்கை. இந்த மூன்று தலைவர்களின் வாழ்க்கையையும் முழுமையாக விவரிக்கிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.
Be the first to review “Ulagappugal Petra Thalaivargal” Cancel reply
Reviews
There are no reviews yet.